ஆபரேஷனில் இருந்த மூதாட்டி; கொடூரமாக தாக்கிய மருத்துவர் - பகீர் வீடியோ!

Viral Video China Crime
By Sumathi Dec 24, 2023 10:41 AM GMT
Report

சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை மருத்துவர் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை

சீனா, குய்காங்க் பகுதியில் அயர் சீனா கண் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு 2019ல் 82 வயது மூதாட்டி சிகிச்சையில் இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

china

அதில் நோயாளி, மருத்துவரின் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் அறுவை சிகிச்சையின்போது உண்டான எரிச்சலில் கண்ணைக் கைகளைக் கொண்டு தேய்க்க முயற்சிக்கிறார். இதனால் பொறுமை இழந்த மருத்துவர் அவரைத் தாக்குகிறார்.

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மருமகன் - பகீர் சம்பவம்!

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மருமகன் - பகீர் சம்பவம்!

தாக்கிய மருத்துவர்

படபடப்புக்குள்ளான நோயாளியை அருகில் உள்ள செவிலியர் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது குறித்து அயர் சீனா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சையின்போது கண்பகுதியில் கைகள் பட்டால் எளிதாக தொற்று ஏற்படும். அந்த அபாயத்தைத் தவிர்க்கவே மருத்துவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

மருத்துவர் உள்பட மருத்துவமனை நிர்வாக அதிகாரியும் பணி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவமனை இது குறித்து மன்னிப்பு கேட்டதாகவும் 500 யுவான் (70 அமெரிக்கா டாலர்கள்) இழப்பீடாக வழங்கியதாகவும்,

மேலும் அந்த தாக்குதலின் காரணமாக தனது தாய்க்கு தற்பொழுது இடது கண்ணில் பார்வை போய்விட்டது என அவரது மகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.