தெருவில் இதயத்துடிப்பு நின்று கிடந்த சிறுவன்; CPR செய்து உயிரை காத்த டாக்டர் - வைரல் சம்பவம்!
சிறுவனுக்கு CPR செய்து மருத்துவர் ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார்.
சிபிஆர் முதலுதவி
ஆந்திரா, ஐயப்பா நகரில் 6 வயது சிறுவன், தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மின்கம்பத்தை பிடித்து கொண்டிருக்கையில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
உடனே, மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்த மகனை பார்த்து பெற்றோர் கதறியுள்ளனர். உடனே, அந்த வழியாக வந்த பெண் மருத்துவர் ராவேலி என்பவர், இதயத்துடிப்பு நின்ற சிறுவனுக்கு சிபிஆர் முதலுதவி அளித்துள்ளார்.
நெகிழ்ச்சி வீடியோ
நீண்ட போராட்டத்திற்குப் பின் சிறுவன் உயிர் பிழைத்துள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
విద్యుత్ షాక్తో ఆగిన ఆరేళ్ల బాలుడి గుండె.. సీపీఆర్ చేసి ప్రాణాలు రక్షించిన డాక్డర్
— Telugu Scribe (@TeluguScribe) May 17, 2024
విజయవాడ - అయ్యప్పనగర్లో సాయి(6) అనే బాలుడు రోడ్డు మీద విద్యుత్ షాక్ తగిలి గుండె ఆగిపోయి అపస్మారక స్థితిలోకి వెళ్ళాడు.
అటుగా వెళ్తున్న డాక్టర్ రవళి చూసి బాలుడికి సీపీఆర్ చేసి బాలుడి ప్రాణాలు… pic.twitter.com/qeLQ2tJRbv
தற்போது, சிறுவன் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.