நான் adjustment கேட்டு பலர் வந்தனர்; அப்போ அமைதியா இருந்திட்டு...பிரபலம் ஓபன்டாக்!
தமிழ் சினிமா உலகம் குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் காந்தராஜ் தெரிவித்து வருகிறார்.
பிரபலம் ஓபன்டாக்
அண்மையில், மருத்துவர் காந்தராஜ் அளித்த பேட்டி ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அவர் பேசிய பல விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து அவர் அளித்த அந்த பேட்டியில், "தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பலரும் பேசி வருகின்றார்கள்.
அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது, பாலியல் பலாத்காரம் கிடையாது. ஒருவருடன் உடலுறவு கொள்ள மற்றொருவர் ஆசைப்படுகின்றார் என்றால், அது எப்படி நடக்கும், அதற்கு அவரிடம் கேட்டால்தானே நடக்கும். அப்படியானால், அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது, இருவருக்கும் சம்மதத்துடன் நடப்பது.
ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் நோ சொல்லிவிட்டால், அங்கேயே அந்த விஷயம் முடிந்துவிடும். சினிமா தொழிலில் எந்த அளவிற்கு பெண்கள் இருக்கின்றார்களோ அதே அளவிற்கு மருத்துவத்துறையிலும் உள்ளனர். நானும் பலரிடம்அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கேட்டுள்ளேன்.
அப்போ அமைதியா..
அவர்களும் சம்மதித்தார்கள், எல்லாம் நடந்து முடிந்தது. இதில் தவறு எதுவும் இல்லை. சினிமா நடிகைகளுக்கு நடந்ததும் அதேதான். ஆனால் அன்றைக்கு அமைதியாக இருந்துவிட்டு, இன்றைக்கு, என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் எனக் கூறுவது எந்த அளவிற்கு சரி எனத் தெரியவில்லை.
நான் நிறைய சகிலா படம் பார்த்திருக்கின்றேன். சகிலா நடித்த படங்கள் எல்லாம் மன்மதனுக்கான பக்திப் படங்கள். எனது ஆசிரியர்கள் தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என தலைக்கு முண்டாசு கட்டிக்கொண்டு வந்து பார்ப்பார்கள்.
ஆனால் நாங்கள் எல்லாம் முதல் வரிசையில் அமர்ந்து சகிலா படம் பார்ப்போம். சினிமாவைப் பொறுத்தவரையில் கேமரா மேன், கதாநாயகன், எடிட்டர், இயக்குநர் என பலரிடம் ஒரு நடிகை அட்ஜெஸ்ட் செய்து போகவேண்டிய சூழலை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கிவிட்டார்கள்.
கேமராமேனிடம் அட்ஜெஸ்ட் செய்து போகவில்லை என்றால், உங்களை வேறு கோணத்தில் காட்டிவிடுவார். எடிட்டரிடம் அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால், நீங்கள் இருக்கும் காட்சிகளை அவர் வெட்டிவிடுவார், இயக்குநர் மற்றும் கதாநாயகனிடம் ஒத்துழைக்கவில்லை என்றால் அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
