என்கிட்ட Adjustment பத்தி பேசுனாங்க - உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்
சினிமாதுறையில் இருக்கும் அட்ஜெஸ்மண்ட் குறித்து பிரியா பாவனி சங்கர் கூறியுள்ளார்.
பிரியா பாவனி சங்கர்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் சிலம்பரசனின் பத்து தல படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த நிலையில் சினிமாவில் அட்ஜெஸ்மண்ட் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இருந்திருக்கு, ரொம்ப நாளா எனக்கு தெரியாது. ஒரு சில விஷயங்கள் நம்ம செய்யனும் னு.. அது நம்ம யாருனு விவரிக்கறதுக்காக இல்ல.
சினிமா எல்லாமே இரண்டு மடங்கா இருக்கும். எனக்கு சினிமா வட்டம் இல்லாமல் புதுசா வர என்ன சினிமா துறையில் எப்படி நடத்துவாரு னு எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சு நான் பார்த்தப்போநான் அந்த விஷயத்தை சீரியஸா எடுத்துக்க கொஞ்சம் நேரம் ஆனது. நீங்க என்ன சரியா நடத்தனும் ன்றத எல்லாருக்கிட்டையும் நம்ம எதிர்பார்க்க முடியாது.
சரியா அணுகணும்
அவங்களே அதை புரிஞ்சு நடத்துகனும்னு எதிர்பார்க்க கூடாது. நான் சின்னதிரையில் இருந்து வந்து வெள்ளிதிரையில் இருக்கிறேன் என்பதெல்லாம் இல்லை. நீங்கள் எல்லா மக்களையும் சரியான முறையில் அணுக வேண்டும். அவங்களோட வாழ்க்கையையோ அவங்க எங்கிருந்து வந்தாங்க ன்றத பார்க்காதீங்க.. கிருஷ்ணா சார் எல்லோரையும் அப்படிதான் நடத்துவார்.
சிம்புக்கு என்ன மரியாதை கொடுக்கிறாரோ அதே மரியாதை ஓரு ஜீனியர் ஆர்டிஸ்ட்டுக்கும் தருவார். சிம்புக்கு நடிக்க தெரியும் அவர் சிறந்த ஆளுமை அதில். ஆனால் ஒரு ஜீனியர் ஆர்டிஸ்க்கு அது சரியா வராது. அவர்களிடம் கத்துவது தவறு. அதை அணுசரித்து போவது சரியானது அதைதான் கிருஷ்ணா செய்வார். அதுதான் மனித தன்மை. அது எல்லார்கிட்டையும் எதிர்பார்க்குறேன். நானும் அதை எல்லாருகிட்டையும் கொடுக்கிறேன். அது எல்லாருக்கிட்டையும் வந்துடாது னு தாமதமாக தான் தெரிய வந்தது என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.