கழிவறையில் பயிற்சி மருத்துவர் செய்த அசிங்கம்.. பதறிய செவிலியர்கள் - ஷாக் பின்னணி!
பயிற்சி மருத்துவர் ஒருவர் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பயிற்சி மருத்துவர்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர். இங்கு பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்துவதற்காக தனி கழிப்பறை உள்ளது. .
இந்த நிலையில், செலிவியர் ஒருவர் கழிபாறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பேனா வடிவிலான கேமரா ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு இது குறிது உடனே மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா என்பவரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (33)
என்பவர் தான் கேமராவை வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதான் பெயரில், வழக்குப்பதிவு செய்து, பயிற்சி மருத்துவர் வெங்கடேசை கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பின்னணி
அதில் “வெங்கடேஷ் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்எஸ் ஆர்தோ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்றபோது சக ஊழியர்களுடன் இணைந்து வெங்கடேசும் கழிப்பறையில் சென்று பார்த்துள்ளார்.
அவர் அந்தக் கேமராவில் இருந்து மெமரி கார்டை எடுத்துள்ளார். இதனால் போலீஸ் சந்தேகமடைந்து விசாரணை நடத்தியபோது, வெங்கடேஷ் தான் குற்றவாளி என தெரியவந்தது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு அமேஸான் தளத்தில் பேனா வடிவிலான கேமராவை வாங்கி, பிறகு சுத்தம் செய்யும் பிரஷ் ஒன்றில் லப்பர் பேண்ட் வைத்து சுற்றி அங்கு வைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான வெங்கடேஷ் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார். அவருக்கு திருணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனியார் மருத்துவமனையிலும் பயிற்சி மருத்துவராக
பணியாற்றி வந்துள்ளார். அதனால் அங்கும் ஆய்வு நடத்தியுள்ளோம். வெங்கடேஷிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று போலீசார் தெரிவித்தனர்.