டாக்டர் படத்தின் டப்பிங் முடிந்தது சிவகார்த்திகேயன் ட்வீட்

team movie nelson journey
By Jon Feb 02, 2021 09:36 AM GMT
Report

டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் தான் டாக்டர்,இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இவர்களோடு வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது.இந்த நிலையில் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.