மருத்துவரை கொடூரமாக தாக்கிய லாரி டிரைவர்; கதறி அழுத மனைவி - பரவும் வீடியோ!
டாக்டர் தம்பதியை, லாரி டிரைவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுவருகிறது.
கார் சேதம்
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர், டாக்டர் மேகசியான் (33). இவரது மனைவி டாக்டர் தாரணி. இருவரும் காரில் பல்லாவரம் ரேடியல் சாலையில் துரைப்பாக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற லாரி திடீரென காரின்மீது லேசமாக மோதியதில், கார் சேதமடைந்தது. அதனால் மேகசியானுக்கும், லாரி டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சரமாரி தாக்குதல்
அதில், ஆத்திரமடைந்த லாரி டிரைவர் டாக்டரை தாக்கியுள்ளார். அப்போது, அவரது மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்துள்ளது. மேலும், மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனை சாலையில் வேடிக்கைப் பார்த்த சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இதற்கிடையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.