மாமியாரை கொல்ல மாத்திரை வேணும்..மருத்துவருக்கு message அனுப்பிய பெண் - நடந்த ட்விஸ்ட்!
மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் இளம்பெண் ஒருவர் மாத்திரை கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம்
கர்நாடக மாநிலம் பெங்களுருவை சேர்ந்தவர் சுனில் குமார். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் சஹானா என்ற பெண் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தனது மாமியாரைக் கொலை செய்ய மருந்துக் வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
[இளம்பெண்]
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில் குமார் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது தனது மாமியாருக்கு 70 வயது ஆவதாகவும், தினமும் தன்னிடம் தவறாக நடத்துவதாகவும், சித்ரவதை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாத்திரைகளைப் பரிந்துரைக்க கூறியுள்ளார்.
இந்த கோரிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், சஞ்சய் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்,’’உயிரைக் காப்பாற்றுவது ஒரு மருத்துவருடைய கடமை . தொடர்ந்து அந்த பெண் தனது மாமியாரைக் கொல்ல மாத்திரை கேட்டு மெசேஜ் அனுப்பினார்.
இளம்பெண்
பிறகு,அந்தப் பெண் வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து சேட்டையும் நீக்கிவிட்டு சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினார் டாக்டர் சுனில் குமார் கூறினார்.இதற்கிடையில், புகாரின் அடிப்படையில் சஞ்சய் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெண்ணின் தொலைப்பேசி எண் தற்போது அணைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் யார் என்பது குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.