பற்களை விற்று சம்பாத்யம்; கோடிகளில் வருமானம் - அதிர்ச்சியில் ஆழ்த்திய மருத்துவர்!
மருத்துவமனையில் நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல் விற்பனை
கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் ஒருவர் வித்தியாச நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார். என்னவென்றால், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்று வந்துள்ளார்.
ஒரு அறையில் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறுசுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பற்களை கடந்த 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.
சிக்கிய டாக்டர்
இதன் மூலமாக சுமார் 30 மில்லியன் யென் சம்பாதித்திள்ளார். ( இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 63 லட்சம் ரூபாய்). இந்நிலையில், பழைய பற்களை மட்டும் திருடி வந்தவர் சம்பாத்யத்திற்காக புதிய பற்களையும் திருடி விற்றுள்ளார்.
இதனை கண்டறிந்த மருத்துவமனை நிர்வாகம், புகாரளித்துள்ளது. அதன்படி விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் செய்து வரும் திருட்டு தெரியவந்துள்ளது.
தற்போது அவர் இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.