வலியால் துடித்த பெண்.. தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர் - இறுதியில் அதிர்ச்சி!

Uttar Pradesh India Crime
By Swetha Oct 01, 2024 07:30 AM GMT
Report

மருத்துவர் பெண்ணின் தலைக்குள் ஊசியை வைத்து மறந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துடித்த பெண்.. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாபூர் என்ற பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

வலியால் துடித்த பெண்.. தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர் - இறுதியில் அதிர்ச்சி! | Doctor Accidentally Leaves Needle In Womens Head

அந்த சமயத்தில் மருத்துவர் தலையின் உள்ளே ஊசியை தவறுதலாக வைத்துவிட்டு தைத்துவிட்டதாக தெரிகிறது. அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகு, கடுமையான வலியால் துடித்த பெண் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாரடைப்பால் துடித்த CEO; உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச் - எப்படி தெரியுமா?

மாரடைப்பால் துடித்த CEO; உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச் - எப்படி தெரியுமா?

தலைக்குள் ஊசி

அங்கு காயமடைந்த பகுதிக்கு ஸ்கேன் செய்தபோது, ஊசி தலைக்குள் இருப்பது தெரிய வந்தது. அதனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து, மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து, அந்த ஊசியை அகற்றினர்.

வலியால் துடித்த பெண்.. தலைக்குள் ஊசியை மறந்து வைத்த மருத்துவர் - இறுதியில் அதிர்ச்சி! | Doctor Accidentally Leaves Needle In Womens Head

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மது போதையில் இருந்ததாகவும், அதனால் தான் அவர் ஊசியை மறந்து விட்டதாகவும், பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.