மாரடைப்பால் துடித்த CEO; உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச் - எப்படி தெரியுமா?

Heart Attack England
By Sumathi Nov 10, 2023 05:04 AM GMT
Report

மாரடைப்பால் துடித்த அதிகாரியின் ஸ்மார்ட் வாட்ச் உதவியோடு பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பால் வாப்ஹம்(42). ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து ரன்னிங் பயிற்சி செய்துள்ளார்.

england

அப்போது, இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகியுள்ளது. உடனே ஸ்மார்ட்வாட்ச் மூலம் தன் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து, அங்கு வந்த மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

9ம் வகுப்பு மாணவி தேர்வறையிலேயே திடீர் மயக்கம் - மாரடைப்பால் மரணம்!

9ம் வகுப்பு மாணவி தேர்வறையிலேயே திடீர் மயக்கம் - மாரடைப்பால் மரணம்!

ஸ்மார்ட் வாட்ச் உதவி

மேலும், அங்கு பரிசோதித்ததில் தமனியில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. உடனே அடைப்பை அகற்றுவதற்கான சிகிச்சைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து அவர் பேசுகையில், `நான் வழக்கம் போல காலை 7 மணிக்கு ரன்னிங் சென்றேன், ரன்னிங் சென்ற ஐந்து நிமிடங்களிலேயே எனக்கு மார்பில் பெரும் வலி ஏற்பட்டது.

smartwatch-save-uk-company-ceo-life

எனது மார்பு இறுக்கமாக இருந்தது. சாலையில் கைகள் மற்றும் முழங்கால்களை ஊன்றியபடி சரிந்தேன். இறுக்கமாக இருந்த வலி பின்னர் பிழிவதைப் போல மாறியது. என் மனைவி லாராவுக்கு போன் செய்ய என் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தினேன்.

அதிர்ஷ்டவசமாக, நான் வீட்டில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தேன். அதனால் அவள் ஓடி வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவர்கள் விரைவாகச் செயல்பட்டனர். அந்த நேரத்தில் ஸ்மார்ட்வாட்ச் பெரிதும் உதவியாக இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.