உலகின் பணக்கார பிச்சைக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
பணக்கார பிச்சைக்காரரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிச்சைக்காரர்..
பெரும்பாலும் யாசகம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடும் நபர்களாக இருப்பார்கள். அழுக்கான உடை, மெலிந்த தேகம், பாவமாக முகம் என அவர்களைப் பார்க்கும் போதே அவர்களின் அன்றாட வாழ்க்கையில் படும் அவதிகளை அறியமுடியும்.
ஆனால், பிச்சையெடுப்பதை லாபகரமான தொழிலாக ஒரு சிலர் செய்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அந்த வகையில், பாரத் ஜெயின் என்பவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார்.
வறுமையின் காரணமாக கல்வியை அவரால் பெறமுடியவில்லை. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், சகோதரர் மற்றும் தந்தையோடு வசித்து வருகிறார். தனது குழந்தைகள் இருவரையும் வெற்றிகரமாக படிக்க வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவரது சொத்து மதிப்பு ரூ. 7.5 கோடியாக உள்ளது. பிச்சை எடுப்பதன் மூலம் மாதம் ரூ.60 ஆயிரம் -75 ஆயிரம் சம்பாதிக்கிறார். மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை பாரத் ஜெயின் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு அவர் தானேயில் இரண்டு கடைகளையும் வாங்கியுள்ளார், அதன் மூலம் அவருக்கு மாத வாடகை 30,000 ரூபாய் கிடைக்கிறது. பாரத் ஜெயின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது மும்பை ஆசாத் மைதானத்தில் பிச்சை எடுப்பதை பார்க்கலாம்.
பாரத் ஜெயின் குடும்பத்தின் மற்ற நபர்கள் ஸ்டேஷ்னரி கடையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தகாரரான பாரத் ஜெயின் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் ஆவார்.