சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட்டால் எண்ணற்ற பாவம் - என்ன காரணம் தெரியுமா?

Tamil nadu India
By Swetha Aug 26, 2024 06:32 AM GMT
Report

 சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது என்பதன் காரணம் குறித்து காணலாம்.

பிரசாதம்

சிவலிங்கம் சிவனின் வடிவமாக கருதப்படுகிறது. நம்பிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவலிங்கத்தை வழிபாடு செய்தால் பல நன்மைகள் நடக்கும் எனப்படுகிறது.

சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட்டால் எண்ணற்ற பாவம் - என்ன காரணம் தெரியுமா? | Do You Know Why Should Not Eat Sivalinga Prasadam

இந்த நிலையில் சிவலிங்கத்தின் மீது பிரசாதமாக வழங்கப்படும் உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாகவே, எல்லா தெய்வ வழிபாட்டின் போது வழங்கப்படும் பிரசாதம் சாப்பிடலாம்..ஆனால் சிவலிங்கத்திற்கு வழங்கப்படுவதால் என்ன நடக்கும் என்று புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிவபெருமானின் வாயிலிருந்து பேய்களின் தலைவனாக கருதப்படும் சண்டேஷ்வர் என்ற கணன் தோன்றியதாக சிவபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சிவலிங்கத்தின் மீது வழங்கப்படும் பிரசாதம் சண்டேஸ்வரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

எனவே, சிவலிங்கத்திற்கு வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடுவது பேய்களிடமிருந்து உணவு எடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. இதனால்தான் அந்த பிரசாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்து மத நூல்களின் படி, களிமண், கல் மற்றும் பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிவலிங்கத்தின்,

ராமர் கோவில் பிரசாத விவகாரம் - அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..காரணம் என்ன?

ராமர் கோவில் பிரசாத விவகாரம் - அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..காரணம் என்ன?

என்ன காரணம்?

மீது வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது ஏனெனில் அது சண்டேஸ்வரனுக்கு உரியதாகும். உலோகம் அல்லது பாதரசத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு நீங்கள் உணவு அளித்து இருந்தால் அதை பிரசாதமாக ஏற்றுக் கொள்ளலாம்.

சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட்டால் எண்ணற்ற பாவம் - என்ன காரணம் தெரியுமா? | Do You Know Why Should Not Eat Sivalinga Prasadam

சிவபுராணத்தின் படி, அந்த பிரசாதம் எண்ணற்ற பாவங்களை அழிக்கிறது. மேலும், சிவலிங்கத்திற்கு சில பொருட்களை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அதில் துளசி, பருப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை அடங்கும். அதுபோல, சிவலிங்க பிரசாதத்தை பித்தளை அல்லது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது.