அட இது தான் காரணமா! தோசைக்கு ஏன் தோசை என்று பெயர் வந்தது தெரியுமா?
தோசைக்கு ஏன் தோசை என்று பெயர் வந்தது என்பதை குறித்து காணலாம்.
தோசை
முன் ஒரு காலகட்டத்தில் பண்டிகை காலங்களில் மட்டுமே செய்யக்கூடிய உணவுகள் எல்லாம் இன்றைய காலத்தில் சாதரணமாக வீட்டில் சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. அப்படி ஒரு வகையான உணவு தான் தோசை. தற்போது தென் இந்திய உணவு முறையில் தோசை ஒரு முக்கிய அங்கத்தை வகுக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் பலபேரின் ‛ஃபேவரைட் ப்ரேக்பாஸ்ட்' என்றால் அது தோசையாக தான் இருக்கிறது.தோசையை மெல்லிசாக ஊற்றி சுட சுட நொடியில் செய்து விடலாம்,அந்த மொறுமொறுப்பான தோசையுடன் நல்ல ருசியில் தொட்டுக்கை இருந்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் கணக்கே தெரியாத அளவுக்கு இருப்பதால் பலருக்கு இதன் மேல் விருப்பம் வந்துவிடுகிறது. இது பிற நாடுகளுக்கும் பொருந்தும்.
பெயர் காரணம்
தற்போது தோசை என்பது தோசா என்ற பெயரில் வெளிநாட்டினரும் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக தான் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 3ம் தேதி ‛உலக தோசை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் மட்டும் 100க்கும் அதிக வகையிலான தோசைகள் பயன்பாட்டில் உள்ளது.
இப்படி ஒரு பிரத்தேயக உணவான தோசைக்கு பின்னணியில் மிக பெரிய வரலாறு உள்ளது. அதாவது தோசை முதலில் உருவானது எங்கே என்று இரண்டு தரப்புகள் மோதிக்கொள்கின்றனர். ஒரு தரப்பு தமிழ்நாடு என்கிறது மற்றொண்டு கர்நாடக என்கிறது. இந்த உரிமை கோரும் விவாதங்கள் இணையத்தில் அரங்கேறியுள்ளது.
இது குறித்து உணவு ஆராய்ச்சியாளர் பி தங்கப்பன் நாயர் பேசுகையில், தோசை கர்நாடகாவின் உடுப்பில் தான் பிறந்தது. CE 1126ம் ஆண்டில் கர்நாடகாவை ஆட்சி செய்த சாளுக்கியா அரசர் 3ம் சோமேஸ்வரா எழுதிய மனேசோலாசா (Manasollasa) என்ற சமஸ்கிருத என்சைக்லோபீடியாவில் தோசை என்பது ‛தோசகா' என்ற வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் இந்தியாவின் பிற இடங்களுக்கு தோசை என்பது பரவ தொடங்கியது'' என்றார்.
எப்படி தெரியுமா?
ஆனால், முதலாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் தோசை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது இருக்கட்டும் தோசைக்கு எப்படி தோசை என்று பெயர் வந்தது தெரியுமா? அதாவது, அந்த பெயரின் பின்னணியில் பல கட்டுக்கதைகள் உள்ளது.
தோசையை திருப்பி போடும்போதும் மீண்டும் ‛சை' என்ற சத்தம் வரும். இப்படி 2 முறை ‛சை' என்ற சத்தம் வருவதால் ‛தோசை' (தோ என்பது ஹிந்தியில் நம்பர் 2யை குறிக்கும்) என்கின்றனர் ஆனால் உண்மை காரணம் என்பது வேறு. அதை தமிழ் மொழி அறிஞர்கள் பலர் விளக்கமளித்துள்ளனர்.
குறிப்பாக சொல்லாராட்சியின் வல்லுனர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தோசையின் பெயர் காரணத்தை கூறியுள்ளார்.இந்த நிலையில், தோய் + செய் = தோய்செய் என்பது தான் காலப்போக்கில் மருவி தோசை என்றாகிவிட்டது என்கிறார்.
‛தோய்' என்றால் புளித்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி தேய்த்து எடுப்பதை குறிக்கும். இப்படி தோய்த்து செய்யும் இந்த உணவு என்பதால் தோய் + செய் என்பது மருவி காலப்போக்கில் தோசை என்றாகிவிட்டதாக அவர் விளக்குகிறார். இப்படியாக ஒரு சுவாரசியமான வரலாறு தோசைக்கு உள்ளது என்பது மிகவும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.