இந்தியாவில் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத மாநிலம் எது தெரியுமா?ஆச்சரியப்படுவீங்க!
இந்தியாவில் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத மாநிலம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா
தென்கிழக்கு ஆசியாவில் 3,600 பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. அதில் ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும்.
அந்த வகையில், இந்தியாவில் அதிக பாம்பு இனங்கள் காணப்படும் மாநிலம் கேரளா ஆகும். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு, காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், பாம்பினங்கள் அழிந்து வருவதாக வனஉயிரின ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத மாநிலம் உள்ளது தெரியுமா? ஆச்சரியமாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசமாக உள்ளது.இதன் பரப்பளவு 32 சதுர கிலோமீட்டர்.
பாம்புகள்
இது 36 சிறிய தீவுகளால் ஆனது.இங்கு மக்கள் தொகை 64,000 ஆகும். லட்சத்தீவில் 96 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். மற்ற 4 % இந்து, பௌத்த மற்றும் பிற மதத்தினர் வாழ்கின்றனர்.
இங்குப் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத ஒரே மாநிலமாக லட்சத்தீவுக்கே உள்ளது.அதுமட்டுமில்லாமல் லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.