4 மாதங்கள் வரை உணவின்றி தூங்கும் பாம்புகள் - காரணத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
குளிர்காலத்தில் பாம்புகள் உறக்க நிலை செல்வதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்புகள்
குளிர்காலத்தில் சில விலங்குகள் பெரும்பாலும் உறக்க நிலையிலேயே காணப்படும். இவை வளர்ச்சி மாற்றம் மற்றும் மனச்சோர்வின் நிலை காரணமாகக் காணப்படுகிறது. பாம்புகளின் வாழ்விடம் காடுகளில் தான்
ஆனால், காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் அவைகள் அடிக்கடி உணவு தேடிக் குடியிருப்புகள், கிராமங்கள் நோக்கி வருகின்றனர். சாதாரண நாட்களிலும் , மழைக்காலங்களில் பாம்புகள் அதிக அளவில் எலி மற்றும் தவளைகளைத் தேடி வீடுகளுக்குள் நுழைகின்றன.
அதுமட்டுமில்லாமல் மக்கள் நடமாடும் பகுத்னிகளில் தென்படும். ஆனால் மழைக்காலங்களில் அழிவை ஏற்படுத்தும் பாம்புகள் குளிர்காலம் தொடங்கும் போது எங்குச் செல்லும் தெரியுமா? இந்தக் கேள்வி இன்று மக்கள் மனதில் அதிகமாக எழுகிறது.
உறக்க நிலை
இது குறித்து நட்டத்தபட்ட ஆய்வில் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளனர். பெரும்பாலான பாம்புகள் கோடை மற்றும் மழைக்காலங்களில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் இறைகளைச் சுலபமாக வேட்டையாடும்.
ஆனால் குளிர்காலம் வந்துவிட்டால் உறக்க நிலைக்குச் சென்றுவிடும். தொடர்ந்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பாம்புகள் உறங்கும். பல பாம்புகள் குகைகளிலோ அல்லது பாறைப் பிளவுகளில் உறங்கும். வெப்பத்திற்காக ஒன்றாகச் சுண்டு காணப்படும்.
பாம்புகளுக்குப் பசி அல்லது வெயில் தேவைப்படும்போது மட்டுமே அவற்றின் துளைகளிலிருந்து வெளியே வரும். இல்லையெனில் அவை தூங்கிக் கொண்டே இருக்கும்.