இந்த மரத்துக்கிட்ட மட்டும் போய்டாதீங்க.. பாம்பை விட அதிக விஷம் கொண்டதாம்!

Florida World
By Swetha Nov 23, 2024 11:30 AM GMT
Report

பாம்பை விட அதிக விஷம் கொண்ட மரத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

விஷம் மரம்

பெரும்பாலான மக்கள் பாம்பை பார்த்துப் பயப்பட காரணம் அது கடித்தல் விஷம் பரவி மணிதர்கள் இறக்கலாம் என்பதால்தான். ஆனால் விஷம் பாம்புகளில் மட்டுமில்லை, சில பூச்சி, தாவரங்கள், உணவுகளில் கூட இருக்கலாம்.

இந்த மரத்துக்கிட்ட மட்டும் போய்டாதீங்க.. பாம்பை விட அதிக விஷம் கொண்டதாம்! | This Is The Most Poisonous Tree In The World

அந்த வகையில் ஒரு மரத்தின் விஷம் பாம்பைக் காட்டிலும் வலுவானது என்று கூறப்படுகிறது. அதாவது, மஞ்சினீல் என்ற மரத்தின் விஷம் மிகவும் கொடியது என கூறப்படுகிறது. இந்த நச்சு மரம் தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கே கரீபியன் தீவுகள் மற்றும் புளோரிடாவில் காணப்படுகிறது.

இந்த மஞ்சினீல் மரத்தில் ஆப்பிள் போலவே பழங்கள் கிடைக்கும். ஆனால் இந்த பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனென்றால், பழத்துடன் மரத்தில் இருந்து சுரக்கும் திரவம் மனித உடலில் கடுமையான விஷத்தை ஏற்படுத்துகிறது.

பாம்பு கடியை நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு - வெளியான அறிவிப்பு!

பாம்பு கடியை நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு - வெளியான அறிவிப்பு!

எது தெரியுமா?

கரீபியனில் உள்ள பல மஞ்சினீல் மரங்களில் எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மழைக் காலங்களில் இந்த மரத்தின் கீழ் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மரத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுவான நச்சுகள் உள்ளன.

இந்த மரத்துக்கிட்ட மட்டும் போய்டாதீங்க.. பாம்பை விட அதிக விஷம் கொண்டதாம்! | This Is The Most Poisonous Tree In The World

அதன் பால் வெள்ளை சாற்றில் ஃபோர்போல் மற்றும் பிற தோல் எரிச்சல்கள் ஏற்படுகின்றனர். இந்த மஞ்சினீல் மரத்தின் திரவம் நம் மீது பட்டால், தொண்டை, வாயில் அசௌகரியம், தோல் எரிச்சல்கள் மற்றும் ஒவ்வாமை ஆகியவை ஏற்படும்.

ஒருவேளை இந்த திரவம் வயிற்றுக்குள் சென்றால், மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​இந்த மரம் புளோரிடாவில் அழிந்து வரும் நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது. எனினும் அழிந்து வரும் மஞ்சினீல் மரத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.