உலகிலேயே அதிகபட்சம் chat- gpt பயன்படுத்தும் நாடு எது தெரியுமா? ஆய்வின் அதிர்ச்சி தகவல்!
ஏஐ செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடு குறித்த தகவல் ஒன்று ஆய்வில் வெளியாகியுள்ளது.
நாடு எது ?
அபார வளர்ச்சி அடைந்து வரும் இந்த உலகத்தில் ஒரு முக்கிய அங்கமாக ஏஐ தொழில்நுட்பம் மாறியுள்ளது.அந்த வகையில் சாட் ஜிபிடி எனப்படும் உரையாடல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு செயலி பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது வேலையை எளிதில் செய்யகூடியவையாக சாட் ஜிபிடி இருப்பதால் அதை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். அப்படியாக சாட்ஜிபிடி-ஐ அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் விவரம் குறித்து ஆய்வின் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரபல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, இந்தியர்கள் தான் உலகிலேயே அதிகபட்சமாக சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துகிறார்கள் கிட்டதட்ட 45% மக்கள் அதிகம் பயன்ப்படுத்துவதாக கூறுகிறது.
ஆய்வு தகவல்
அடுத்தப்படியாக மொரோக்கோவில் 38% , ஐக்கிய அரபு அமீரகத்தில் 34%, அர்ஜெண்டினா, பிரேசில், இந்தோனேசியாவில் 32% தென் ஆப்ரிக்காவில் 31% என சாட் ஜிபிடி பயன்பாடு இருக்கிறது. அதேபோல பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்
இது 21 முதல் 30%க்குள் பயன்ப்படுத்தப்படுவதாக கூறுகிறது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சதவிகிதம் 18 மற்றும் 19 என இருக்கிறது. அமெரிக்காவின் பாஸ்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் படி தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இளம் வயதினர் அதிகம் இருக்கும் நாடுகளில்தான் இந்த சாட் ஜிபிடியின் பயன்பாடு உச்சத்தை தொடுகிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக தங்களுடைய வேலைகள் சார்ந்த,
பயன்பாட்டிற்காக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, ஆனால் அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் சாட் ஜிபிடியை வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.