இந்தியாவில் சாக்லேட் நகரம் எதுன்னு தெரியுமா? அதுவும் தமிழ்நாட்டில்
இந்தியாவில் சாக்லேட் நகரம் என்று அழைக்கப்படுவது எந்த இடம் என்பதை குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
சாக்லேட் நகரம்
இந்தியாவில் சாக்லேட் நகரம் எது என்று கேட்டால் நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு அவ்வளவாக தெரிவதில்லை. இந்த பதிவில் கொடுக்கப்படும் விரிவாக தகவல் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.
இந்தியாவில் சுாக்லேட் நகர் என்று அழைக்கப்படுவது ஊட்டி ஆகும். நீலகிரி மலைகளில் அமைந்துள்ள ஊட்டியில் வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட் மிகவும் பிரபலமானது.

வருடம் தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் என குடும்பத்துடன் வருகை தருகின்றனர்.
ஊட்டியில் உள்ள குளிர்ந்த கால நிலையில், சாக்லேட் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்ற சூழ்நிலையாக இருக்கின்றது. சிறிய குடும்பங்களாக இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட் மிகவும் பிரபலம்.

இங்கு சுற்றுலா செல்பவர்கள் சாக்லேட் வாங்காமல் வருவதில்லை. வழக்கமாக இருக்கும் இனிப்பு வகைகள் போன்று இல்லாமல், சாக்லேட்டில் அதன் செழுமை மற்றும் பன்முகத்தன்மை தனித்து தெரியுமாம்.
சுற்றுலா பயணிகள் அதிகமாக வாங்கி செல்வதால் சாக்லேட் டவுன் என்று பெயர் பெற்றதுடன், இதன் காலநிலை தான் சாக்லேட்டின் தனித்தன்மை மாறாமலும் இருக்கின்றது.
மேலும் இந்த குளிர் காலநிலையாக இருப்பதால், பால் மற்றும் கிரீம்கள் கிடைப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் உயர்தர சாக்லேட்கள் தயாரிக்க முடிகின்றது.
