பிறந்த உடனே தாயை உண்ணும் கொடிய உயிரினம் - இதை பார்த்து இருக்கீங்களா?
பிறந்த குட்டியே தாயை உண்ணும் உயிரினம் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
உயிரினம்
உலகில் உள்ள சிறிய உயிரினங்கள் முதல் மனிதர்கள் வரை எதாவது ஒரு செயலில் நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டு இருக்கும். அந்த வகையில் பிறந்த உடனே குட்டியே ஈன்ற தாயை உண்ணும் உயிரினத்தை கேள்விப்பட்டு இருக்கீர்களா? இதைப் படிக்கும் சிலருக்குச் சிங்கம், கங்காரு, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகள் தான் நியாபகம் வரும்.
ஆனால் இது ஒரு சிறிய விலங்கு தான். இதை நாம் வீடுகளில் உள்ள சிறிய துளை, நிலங்களில் பார்த்து இருக்கிறோம். அது பெண் தேள் என்றால் நம்ப முடிகிறதா ? இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விஷமுள்ள உயிரிகள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் தேளுக்கு அதில் தவிர்க்க முடியாத இடமுண்டு.
சுவாரஸ்ய தகவல்
ஒரு தேளில் 2 மில்லிகிராம் நஞ்சு உள்ளது.குறிப்பாக மத்திய தென் அமெரிக்கப் பகுதியைச் சேர்ந்த தேள்களின் கொடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் மார்கடாக்சின் என்ற பொருள் மூலம், ரத்த நாளங்களில் புதிய ரத்த செல்கள் உருவாவதுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளின்போதும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு பெண் தேள் ஒரு நேரத்தில் குறைந்தது பல குஞ்சுகளைப் பெற்றெடுக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதற்காக தன் தோளில் தாய் தேள் சுமந்து செல்கிறது. அவ்வாறு சுமந்து செல்லும் போது அதன் குஞ்சுகள் தாயின் சதையைச் சாப்பிடுகின்றன. தாய் தேளின் உடல் குழியாகி அது இறக்கும் வரை தேள் குஞ்சுகள் அவ்வாறு செய்கின்றன.