இந்தியாவின் தேசிய ஸ்வீட் இதுதான் -ஆனால் இது நம்ம நாட்டை சேர்ந்தது கிடையாது!
இந்தியாவின் தேசிய ஸ்வீட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியா
இந்தியாவின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மலர் எது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தேசிய இனிப்பு என ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் வடக்கு பகுதிகளில் காலை உணவுடன் ஸ்வீட் சேர்ந்து பரிமாறப்படுவது வழக்கம். அப்படி என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது ரசகுல்லா தான். இது தான் தேசிய ஸ்வீட்டாக இருக்கும் என நினைக்கலாம்.
தேசிய ஸ்வீட்
ஆனால் அது தவறு. உண்மையில் நம் நாட்டின் தேசிய இனிப்பு, ஜிலேபி ஆகும் .இந்தியாவில் ஜிலேபி 1889ம் ஆண்டு ஜபல்பூரில் ஹர்பிரசாத் பட்குல் என்பவர் தான் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
ஜலேபியை 'குண்டலிகா' அல்லது 'ஜல்வல்லிகா' என்று அழைக்கப்படுகிறது.இது ஈரானிய இனிப்பு என்று கருதப்படுகிறது. அதே சமயம் வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரபல இனிப்பு உணவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.