தவெக தலைவர் விஜயின் சொந்த ஊரு எது தெரியுமா? அவரது பூர்வீக வீடு உள்ள நிலை!

Vijay Tamil nadu Ramanathapuram
By Swetha Oct 29, 2024 09:37 AM GMT
Report

த.வெ.க தலைவர் விஜய் பூர்வீக கிராமமானது குறித்து இந்த பதிவில் காணலாம்.

தலைவர் விஜயின்

விஜய் பூர்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தில் அவர் தாத்தாவின் கல்லறை அமைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினர் கூறியதாவது,  விஜய் பிறந்த கிராமம் முத்துப்பேட்டை.

தவெக தலைவர் விஜயின் சொந்த ஊரு எது தெரியுமா? அவரது பூர்வீக வீடு உள்ள நிலை! | Do You Know Whats Tvk Leader Vijays Native Village

அவரது தாத்தா சேனாதிபதி பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே துறையில் பணிபுரிந்துள்ளார். சினிமா மற்றும் கலைத்துறை ஆர்வத்தால் சந்திரசேகர் இளமை காலத்தில் சென்னை வந்துள்ளார்.

அரசியல் களத்தில் அனல் தெறிக்க பேசிய விஜய் - சீமான் கொடுத்த எச்சரிக்கை!

அரசியல் களத்தில் அனல் தெறிக்க பேசிய விஜய் - சீமான் கொடுத்த எச்சரிக்கை!

பூர்வீக ஊரு

அவரது உறவினர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். 1982ல் சேனாதிபதி இறந்த பின் கல்லறையில் வழிபாடு செய்வதற்காக ஆண்டிற்கு இரு முறையாவது வந்து செல்கிறார்.கடந்த ஜூலை 17ல் இந்த கல்லறை புதியதாக சீரமைக்கப்பட்டது.

தவெக தலைவர் விஜயின் சொந்த ஊரு எது தெரியுமா? அவரது பூர்வீக வீடு உள்ள நிலை! | Do You Know Whats Tvk Leader Vijays Native Village

அச்சமயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் அன்னதானம் அளித்தார். தற்போது விஜயின் பூர்வீக கிராமம் முத்துப்பேட்டை என்பதை அறிந்த ஏராளமானோர் இங்கு வருகின்றனர். கல்லறையை பார்த்து செல்கின்றனர்.

விஜய் சிறுவயதில் மட்டுமே கிராமத்திற்கு வந்ததாக அறிகிறோம். முத்துப்பேட்டையில் விஜய் குடும்பத்தினர் வாழ்ந்த பூர்வீக வீடு இருந்த இடம் தற்போது வெற்று நிலமாகத்தான் உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.