இன்றுவரை மழையே பெய்யாத கிராமம்..குவியும் சுற்றுலா பயணிகள் - என்ன காரணம்?
உலகில் மழையே பெய்யாத கிராமம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழை
உலகில் உயிர் வாழ உணவு , உடை, நீர், வாழ்விடம் முக்கியமானது. மழை இல்லையென்றால் மனிதர்களோ பிற உயிர்களோ உயிருடன் இருக்க முடியுமா என்றால் அது சந்தேகம் தான்.ஆனால் உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் 'அல்-ஹுதைப்' என்ற இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமமானது ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில், தரைமட்டத்திலிருந்து தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த பகுதி மற்ற பகுதிகளை விட உயரமாக உள்ளதாக அதிக வறட்சியுடன் காணப்படுகிறது.அல்-ஹுதைப் கிராமத்தைப் பொறுத்தவரைப் பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் காணப்படும். பொதுவாக, கரு மேகங்கள் கூடினால் மட்டுமே மழை பெய்யும்.
கிராமம்
அதுவும், மேகங்கள் சமவெளியிலிருந்து 2000 அடி உயரத்திலேயே கூடுகின்றன.ஆனால், அல்-ஹுதீப் கிராமம் 3200 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளதால், அங்கு மேகங்கள் கூடவும் மழை பெய்யவும் வாய்ப்பில்லை.
மேலும் இந்த கிராமத்தில் மலையின் உச்சியில் பல அழகான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மலை உச்சியில் நின்று பார்க்கும் காட்சியைக் காணவே இங்குப் பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.