அமெரிக்காவில் வாழ்வது கடினம்.. அமெரிக்கர்கள் சொன்ன காரணம் -அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும் என அந்நாட்டு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுபேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அது பல உலக நாடுகளுக்கு மட்டுமின்றி அந்நாட்டு மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவுக்குச் செல்ல விசா கிடைக்காதா? என நீண்ட வரிசையில் மற்ற நாடுகளின் மக்கள் தவித்து வருகின்றனர்.ஆனால் அந்நாட்டு அமெரிக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சமீபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த Talker என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அமெரிக்க மக்களின் விருப்பம் குறித்து ஆய்வு நடத்தியது.அதில், 44 % மக்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் விருப்பம்
17 % பேர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளியேறி விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.மேலும் இதற்காக முயற்சிகளில் ஈட்டுப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். மேலும் சிலர் அமெரிக்காவில் வாழ்வது, மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியுள்ளனர்.
இதற்கு மாறாகக் கனடா, ஸ்காட்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் குடிபெயரவே அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.