இயற்கை பேரழிவுகள்.. முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி கொண்ட விலங்குகள் - எது தெரியுமா?
இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் விலங்குகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இயற்கை பேரழிவு
உலகில் இன்றளவும் பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் புயல்கள் போன்ற பேரழிவுகள் ஏற்பட்டு உணவு , வாழ்வாதாரம் ,இருப்பிடம் மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படும். ஆனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகளைத் தெரியப்படுத்தும்.
பல நூற்றாண்டுகளாக, மனிதர்கள் ஒரு இயற்கை பேரழிவை சந்திப்பதற்குப் முன்னர் விலங்குகள் அதனை தெரிந்து கொண்டு இடம்பெயர்ந்து விடும்.இவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி விலங்களிடம் உண்டு.அது எந்தெந்த மிருகங்கள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
நாய் : பூகம்பங்கள், புயல்கள் மற்றும் பிற பேரழிவுகளுக்கு முன்பு நாய்கள் பெரும்பாலும் அசாதாரண நடத்தைகளை வெளிப்படுத்துகின்றன. நாய்க்கு உணர்திறன் வாய்ந்த காதுகளுள்ளன. இதன் மூலம் நில அதிர்வு நடவடிக்கைகளிலிருந்து குறைந்த அதிர்வெண் ஒலிகளையும், அதிர்வுகளையும் மனிதர்கள் உணருவதற்கு முன்பே உணர முடியும்.
விலங்குகள்
யானை : யானைகளுக்குப் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளை உணரும் சிறப்புத் திறன் உண்டு. குறிப்பாக நில அதிர்வு நிகழ்வுகளுக்கு முன் பூமியின் வழியாகச் செல்லும் குறைந்த அதிர்வெண் அதிர்வுகளை யானைகள் உணர முடியும்.
மீன்கள் : ஓர்ஃபிஷ் போன்ற ஆழ்கடல் மீன்கள், பூகம்பத்தை முன்கூட்டியே அறியும் திறன் கொண்டவை ஜப்பானியக் கலாச்சாரத்தில் ஓர்ஃபிஷ்கள் பூகம்பங்களின் சகுனமாகக் கருதப்படுகின்றன.
அந்த வரிசையில் தேரை,பாம்புகள்,பூனை போன்றவை நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.