உலகின் வலிமையான டாப் 10 நாணயங்கள் இதுதான்.. இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Money
World
By Vidhya Senthil
உலகின் வலிமையான 10 நாணயங்களின் இந்திய மதிப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாணயங்கள்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படையில் நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. கரன்சி வளரும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இதன் மூலம் உலகளவில் முதலீடுகளை ஈர்க்கிறது. அதன்படி, ஐக்கிய நாடுகள் சபை உலகளவில் 180 நாணயங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
சில நாணயங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றில் சில பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் உலகின் பத்து வலிமையான நாணயங்களின் இந்திய மதிப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
- குவைத் தினார் (KWD):குவைத்தில் குறைந்த பணவீக்க விகிதங்கள் அதன் நாணய மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு தினாரின் மதிப்பு ரூ. 280.98 ஆகும்.
- பஹ்ரைன் தினார் மதிப்புமிக்க நாணயங்களில் ஒன்றாக உள்ளது .இது இந்திய மதிப்பில் ஒரு தினாரின் மதிப்பு ரூ. 230.10 ஆகும்.
- ஓமான் ரியால் வலிமையான 10 நாணயங்கள் பட்டியலில் முன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய மதிப்பில் ஒரு ரியாலின் மதிப்பு ரூ. 225.22 ஆகும்.
இந்திய மதிப்பு
- ஜோர்டானிய தினார் 4வது இடத்தில் உள்ளது இந்திய மதிப்பில் ஒரு தினாரின் மதிப்பு ரூ. 122.25 ஆகும்.
- ஜிப்ரால்டர் பவுண்டு பிரிட்டிஷ் பவுண்டுடன் ஒப்பிடுகையில் அதே மதிப்பைக் கொண்டுள்ளது இந்திய மதிப்பில் ரூ. 280.98 ஆகும்.
- பிரிட்டிஷ் பவுண்டின் இந்திய மதிப்பில் ஒரு பவுண்டின் மதிப்பு ரூ. 109.63ஆகும்.
- கேமன் தீவு டாலர் இந்திய மதிப்பில் ஒரு டாலரின் மதிப்பு ரூ. 104.54 ஆகும்.
- சுவிஸ் பிராங்க் (CHF) இந்திய மதிப்பில்( ஒரு ப்ராங்-ன்) மதிப்பு ரூ. 96.49 ஆகும்.
- யூரோ (EUR)இந்திய மதிப்பில் (ஒரு யூரோ) மதிப்பு ரூ. 90.78 ஆகும்.
- யுனைடெட் ஸ்டேட்ஸ் டாலர் (USD) உலகின் வலிமையான 10 நாணயங்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு டாலரின் மதிப்பு ரூ. 86.71 ஆகும்.