வாழை இலையின் நடுவில் இருக்கும் கோடு.. உண்மையான காரணம் இதுதானா? தெரிந்து கொள்ளுங்கள்!
வாழை இலையின் நடுவில் இருக்கும் கோடு குறித்த சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழை இலை
தமிழர்களின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் உணவுப்பழக்கம், அனைத்தும் வாழ்வியல் முறையோடு தொடர்புடையது. குறிப்பாக, எந்த வகையான பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது முதல், வாழை இலையில் பரிமாறப்படுவது வரை அனைத்திற்கும் தொடர்பு உண்டு.
பொதுவாகத் திருமணம் முதல் வீட்டு, விருந்து, விசேஷம் அல்லது பண்டிகை என்று வரும்போது, வாழை இலையில் தான் சாப்பிட வேண்டும் என்று எழுதப்படாத விதி தமிழர்களியே உள்ளது. அதிலும் ஒரு சில வீட்டில், தினமுமே வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் உள்ளது. அப்படி வாழை இலையில் சாப்பிடப்படுவதால் ஆரோக்க நன்மையும் உள்ளது.
வாழை இலையில் பாளிபெனால்ஸ் என்ற ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்து உள்ளது. இது கிரீன் டீ மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட் லைஃப்ஸ்டைல் டிசீசஸ் என்று கூறப்படும் வாழ்வியல் கோளாறு மற்றும் நோய்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்ய தகவல்
இத்தகைய சிறப்பு மிக்க வாழை இலையின் நடுவில் இருக்கும் கோடு குறித்த புராணங்களில் கூறப்பட்டுள்ள சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இராமாயண காலத்தில் வாழை இலையில் கோடுகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்.அப்போது இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம். அப்போதுதான் வாழை இலையின் நடுவில் ராமர் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்துள்ளார்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படிப் பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.