இந்த ஒரு பூச்சியின் விலை BMW கார்களை விடவும் அதிகமாம்! அப்படி என்ன இருக்கு?
ரூ. 1 கோடி வரையிலும் வாங்கப்படும் பூச்சி குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஒரு பூச்சி
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பூச்சியாக அறியப்படுவது ஸ்டாக் பீட்டில் எனப்படும் வண்டு தான். சுமார் ரூ. 1 கோடி வரையிலும் விலைக்கு போகும் இது குறித்த சில தகவல்கள் சுவாரசியம் அளிக்கின்றன.
அதாவது, ஒருவரது கையில் புதையல் கிடைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ..அதே போன்ற உணர்வு தான் இந்த பூச்சு அதுவாக தங்களது கைவசம் இருந்தாலும் ஏற்படும். ஏனென்றால் இந்த ஸ்டாக் பீட்டில் பூச்சிகள் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை விலைக்கு வாங்கப்படுகிறதாம்.
சொல்லப்போனால் ஆடி-பி.எம்.டபிள்யூ சொகுசு கார்களை இந்த 3 இன்ச் பூச்சியை வைத்து வாங்கி விடலாம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டை சேர்ந்த பூச்சி வளர்ப்பாளரால் ரூ. 75 லட்சத்திற்கு இந்த ஸ்டாக் பீட்டில் விற்பனை செய்தார்.
விலை அதிகம்
இந்த பூச்சி அழுகிய மரங்கள், பழங்களை சாப்பிடும் என்பதால் பெரும்பாலும் குப்பைகளில்தான் காணப்படும். இந்த பூச்சிகளால் கடும் குளிரை தாங்க முடியாது. வெப்பமான இடங்களில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது. இந்த நிலையில், குணப்படுத்த முடியாத நோய்களை இந்த ஸ்டாக் பீட்டில் மருந்தாக பயன்படுத்தி குணப்படுத்த முடியுமாம்.
அதனால், இதன் தேவையும், விலையும் மிக அதிகம் உள்ளது. தற்போது, இந்த பூச்சியை மருத்துவ குணங்களுக்காக ரூ. 1 கோடி வரையிலும் வாங்குவதற்கு நபர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலும் இந்த பூச்சிகள் அமெரிக்கா மற்றும் நைஜீரியா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.