சர்வதேச விண்வெளி வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
விண்வெளி வீரர்களின் சம்பளம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விண்வெளி வீரர்கள்
விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பிரபலமாக உள்ளது. .
இங்கு பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கு வழங்கும் சம்பளம் பற்றி விரிவாகக் காண்போம். நாசாவில் விண்வெளி வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது 2 தரவரிசைகள் உள்ளன. முதல் தரவரிசையில் உள்ள விண்வெளி வீரர்களின் 65,140 டாலர்கள் வருடத்திற்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ. 55,32,280 ஆகும். இரண்டாவது தரவரிசையில் உள்ள விண்வெளி வீரர்களின் 100,701 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 85,52,443 ஆகும்.
சம்பளம்
அதுபோல ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியில் விண்வெளி வீரர்களின் சம்பளம் A2/A4 தரவரிசையில் வழங்கப்படுகிறது. ஜெர்மனியில் வசிக்கும் விண்வெளி வீரர்களுக்கு வருடத்திற்கு 66,588 யூரோ வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 59,34,785 ஆகும்.
பிரான்சில் வசிக்கும் விண்வெளி வீரர்களுக்கு வருடத்திற்கு 70,143 யூரோவழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 62,51,632 சம்பளம் வழங்கப்படுகிறது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன விண்வெளி வீரர்களுக்கு வருடத்திற்கு சுமார் 141,500 டாலர்கள் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 1,20,17,464 ஆகும்.