உலகின் சக்தி வாய்ந்த ராணுவப் படை..இந்தியாவிற்கு எந்த இடம்? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!
உலகின் சக்தி வாய்ந்த ராணுவப் படை விவரம் வெளியிடப்பட்டுள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராணுவப் படை
உலக நாடுகள் பெரும்பாலும் வலிமையான ராணுவப் படையைக் கொண்டுள்ளன.இதில் எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று அனைத்து காலங்களில் செயல்படும் வகையில் ராணுவப்படை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்தியேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் கொண்டுள்ளது. இதில் சில நாடுகளின் ராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. இது குறித்து Golabal Firepowerதளம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பவர் இண்டெக்ஸ் (PwrIndx) மதிப்பெண்ணைத் தீர்மானிக்க 60-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் இராணுவப் பிரிவுகளின் எண்ணிக்கை, நிதி நிலை, தளவாடத் திறன்கள் முதல் புவியியல் அமைப்புகள் வரையிலான காரணிகளும் அடங்கும் என Golabal Firepower தளம் தெரிவித்துள்ளது.
பட்டியல்
அதன்படி ,உலகின் சக்தி வாய்ந்த ராணுவப் படை உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,2025-ம் ஆண்டுக்கான தரவரிசையில், சக்தி வாய்ந்த ராணுவப் படை பலத்தில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை ரஷ்யா, முன்றாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. மேலும் நான்காவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் 12-வது இடமும், இஸ்ரேல் 15-வது இடமும், உக்ரைன் 20-வது இடமும் பிடித்துள்ளன