ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!
1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
K என்ற வார்த்தை
நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். உதாரணத்திற்குப் புதிதாக கார் ஓட்ட கற்று கொள்வார்கள் வண்டியின் பின்னாடி 'L' என்று சிவப்பு நிறத்தில் போர்டு ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது.
அதனை அறிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட. அதுபோன்று 1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே சமூக வலைத்தளங்களிலும் சரி பணத்திலும் சரி, மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் ஆயிரம் (Thousand) என்பதன் சுருக்கத்தை T என்று தானே குறிப்பிட வேண்டும்.
யன்படுத்துவது ஏன்?
ஆனால் ஏன் ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் (1000) என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ(Kilo) என்று சுருக்கப்பட்டது.
அதன் பின் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணிதத்தில் "K" என்ற எழுத்து ஆயிரத்தைக் குறிக்கிறது. எனவே, "1K" என்பது 1,000 க்கு சமம் ஆகும். இதன் காரணமாகத் தான் 'Kilo' என்பதற்காகத் தான் ‘K' என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது. எனவே ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை.