340 பிரமாண்ட அறைகள்.. ராஷ்டிரபதி பவனில் தங்க மறுத்த குடியரசுத் தலைவர் - யார் தெரியுமா?
ராஷ்டிரபதி பவனில் குடியேற மறுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஷ்டிரபதி பவன்
டெல்லியில் இந்தியக் குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ளது. இது குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாக உள்ளது. இந்த இல்லம் மொத்தம் 3,40,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.இதில் 56 படுக்கையறைகள், 31 குளியலறைகள் 11 உணவகங்கள் உட்பட மொத்தம் 340 பிரமாண்ட அறைகள் உள்ளன.
இந்த கட்டிடத்தை எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். குடியரசுத் தலைவரின் மாளிகை, முதலில் "வைஸ்ராய் மாளிகை" என்று அழைக்கப்பட்டது. தற்பொழுது குடியரசுத் தலைவரின் மாளிகையைப் பொதுமக்கள் பார்வையிட வார நாட்களில் அனுமதிக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒருவர் குடியேற மறுப்பு தெரிவித்துள்ளார். அது யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 1950 இல் இந்தியா குடியரசாக மாறியபோது, முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் நியமனம் செய்யப்பட்டார்.
குடியரசுத் தலைவர்
இந்தியாவில் கல்வி வளர்ச்சியை ஊக்குவித்தார். 1957 ஆம் ஆண்டில், பிரசாத் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் , இரண்டு முறை முழுமையாகப் பதவி வகித்த ஒரே ஜனாதிபதி ஆனார். பிரசாத் சுமார் 12 ஆண்டுகள் பதவியில் நீடித்தார். ராஜேந்திர பிரசாத் காந்தியின் கொள்கைகளைக் பின்பற்றினார்.
இந்த ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேற மறுத்தார். அதன்பிறகு ஆனால், அன்றைய பிரதமராக இருந்த நேருவும், சர்தார் வல்லபாய் படேல் வற்புறுத்தியதால் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜேந்திர பிரசாத் குடியேறினார்.