மதுபான பாட்டிலை திறந்த பிறகு எவ்வளவு நேரத்திற்குள் அருந்த வேண்டும் தெரியுமா?
மதுபான பாட்டிலைத் திறந்த பிறகு எவ்வளவு நேரத்திற்குள் அருந்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மதுபானங்கள்
மதுபானங்களை முடிந்த வரை மிதமான அளவு பருக வேண்டியது அவசியம். தொடர்ந்து மது அருந்துவதால் நமது உடலில் உள்ள உறுப்புகளைப் பாதிக்கிறது. மேலும் வயிறு மற்றும் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, எரிச்சல் அடையச் செய்து, அமில உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதனால் நுரையீரல் , கணையம் உள்ளிட்டவற்றைப் பாதிப்படையச் செய்கிறது.மதுபானத்திற்கும் காலாவதி தேதி(Expiry Date) உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக, மது பாட்டில்களில் காலாவதி தேதி எழுதப்படாது.
அதற்குப் பதிலாக "Best Before" அல்லது "Consume Within" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கும்.மேலும் பெய்லிஸ் ஐரிஷ் கிரீம் போன்ற மதுபாட்டில்களை நீண்ட நேரம் சேமித்து வைக்க முடியாது. அவற்றில் பால் பொருட்கள் இருப்பதால், அவை பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும்.
Expiry Date
பீர் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகிறது. பீர் பாட்டிலைத் திறந்த 1-2 நாட்களுக்குள் அருந்தி விட வேண்டும். இல்லை என்றால் அதன் தரம் மற்றும் சுவை குறைந்து விடும். ஆனால் விஸ்கி, ஓட்கா, ரம், ஜின், டெக்கீலா போன்ற பானங்களுக்கு எக்ஸ்பைரி டேட் கிடையாது.
இந்த காய்ச்சி வடிகட்டிய மதுபானங்கள் முறையில் தயாரிக்கப்படுவதால் நீண்ட காலம் சுவையைத் தாக்குப்பிடிக்கும்.பாட்டிலைத் திறந்த 1-2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சுவை மங்கத் தொடங்கி காலப்போக்கில் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு : இந்த பதிவு பொதுவான தகவல் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.