கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!
கழிவறைக்கு வெளியே WC என்று ஒரு பலகை வைப்பதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கழிவறை
நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். அப்படி நாம் பயணிக்கும் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள்,பள்ளிகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் கழிவறைகள் இருக்கும்.
அங்கு பெரும்பாலும் WC என எழுதப்பட்ட பலகை ஒன்று வைக்கப்பட்டு இருக்கும். இதனை நாம் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் இதற்காக அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அர்த்தம்
குளியலறை என்ற சொல்லுக்குbathroom, restroom,toilet என்று பல பெயர்கள் உண்டு. அது போல தான்WC என்பதும் குளியலறைக்கு மற்றொரு பெயர்.WC என்றால் Water Closet) என்று பொருள்.
அதாவது, தண்ணீர் வசதி கொண்ட கழிவறை ஆகும். "WC" என்று எந்தப் பலகையும் இல்லையென்றால், அங்கு தண்ணீர் அமைப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்பதன் பொருள் ஆகும்.