குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஆண் விலங்கு எது தெரியுமா?ஆச்சர்யமூட்டும் தகவல்!
ஆண் கருவுற்று குட்டிகளை பெற்றெடுக்கும் விலங்கு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆண் விலங்கு
பூமியில் வாழக்கூடிய மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள்,விலங்குகளில் உள்ள பெண் உயிரினங்கள் தான் கருவில் சுமந்து குஞ்சுகளையோ அல்லது முட்டைகளை இடும். ஆனால் ஆண் கருவுற்று குட்டிகளைப் பெற்றெடுக்கும் உயிரினம் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அது கடல் குதிரைகள் ,கடல் டிராகன்கள் தான். இது Syngnathidae குடும்பத்தைச் சேர்ந்தது. இவை மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் உள்ளன. அவைகளின் உடல் அமைப்பும் தனித்துவமானது.கடல் குதிரைகள் தங்களுடைய ஜோடியைக் கவர்வதற்காகப் பச்சோந்தி போல் தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.
இனப்பெருக்க காலத்தில் பெண் கடல் குதிரைகள் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டு விடுகின்றன. இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்கும் வரை ஆண் கடற்குதிரைகள் அவற்றைச் சுமந்து செல்லும். ஆண் கடல் குதிரைகள் கங்காரு போல் ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளைப் பொரிக்கின்றன.
எது தெரியுமா?
இந்த குஞ்சுகள் 1 சென்டி மீட்டர் அளவே இருக்கும் குட்டிகள் ஒரே சமயத்தில் 50 முதல் 100 வரை வெளிவரும். அதே போல் தான் கடல் டிராகன்களும், அதன் முட்டைகளைக் குஞ்சு பொரிக்கும் வரை காவலில் வைத்திருக்கும். ஆண் டிராகன்களின் வால் பகுதியில் ஒரு சிறப்பு நுண் குழாய்கள் இருக்கும்.
அதில் பெண் கடல் டிராகன்கள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும் . பிறகு அடைகாத்து குஞ்சுகள் பெற்றெடுக்கும். இவை சுமாராக 20 மில்லி மீட்டர் (சுமார் 0.8 அங்குலம்) நீளம் இருக்கும்.