குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உயிரினம்
உலகில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு வகையான சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. பாலூட்டிகள் மட்டுமின்றி குஞ்சு பொரிக்கும் உயிரினங்கள் அனைத்தும் வயிற்றில் கருவைச் சுமந்து பின்னர் குட்டி பெற்றெடுக்கும்.
இதற்கு மாறாகக் குஞ்சுகளை வாய் வழியாகப் பெற்றெடுக்கும் உயிரினம் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். அது நம் அனைவருக்கும் தெரிந்த உயிரினம் தவளைதான். தவளைகள் நிலநீர்களில் வாழக்கூடியதாகும்.
எது தெரியுமா?
இதில் சதர்ன் டார்வின்ஸ் இனத்தைச் சேர்ந்த ஆண் தவளைகள் தங்களது குரல்வளையில் தலைப்பிரட்டைகளை வளர்ந்து அவற்றின் வாய் வழியே குஞ்சுகளாகப் பிறப்பெடுக்கின்றன. ஒரு தலைப்பிரட்டை ஒரு வயது வந்த தவளையாக உருவாகும் செயல்முறை உருமாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
இது பார்க்க மீன் குஞ்சு போல இருக்கும். கால்கள் ஏதும் இருக்காது. சுவாசம் செவுள்கள் மூலம் மட்டும் நடைபெறும். மெல்ல மெல்லக் கால்கள் வளரத் தொடங்கும். சதர்ன் டார்வின்ஸ் இனத்தைச் சேர்ந்த ஆண் தவளை ஒரு ஆண் தவளையின் உடல் எடை 2 கிராமுக்கும் குறைவாகவும், உடல் அளவு 3 சென்டிமீட்டர் வரையும் இருக்கும்.