உங்க fridge இந்த மாதிரி இருக்கா? அப்போ இதுதான் காரணம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் ஐஸ் கட்டுவதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஃபிரிட்ஜ்
இன்றைய காலக்கட்டத்தில் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. நாம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் ஐஸ் கட்டுவது அடிக்கடி பிரச்சனை ஏற்படும்.இதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபிரிட்ஜில் நீரை ஆவியாக்கும் காயில் சேதமடைந்திருந்தாலோ அல்லது கதவு மற்றும் லிட் கேஸ்கெட் பழுதடைந்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படும். ஃபிரிட்ஜின் கதவு அல்லது கேஸ்கெட்டில் நீர் சொட்டுதல், உடைந்திருத்தல் போன்ற பிரச்சனை இருந்தால் முற்றிலும் மாற்றுவதே சிறந்த வழி.
ஐஸ் கட்டுதல்
மேலும் ஃபிரீஸரில் தண்ணீரை சுத்திகரிக்கும் வாட்டர் ஃபில்டர் பழுதடைந்தால் ஐஸ் கட்டி உருவாகும். இதனால் நீங்கள் வைக்கும் பொருட்கள் மீதெல்லாம் ஐஸ் கட்டி படர்ந்திருக்கும்.இதற்கு வாட்டர் ஃபில்டரை மாற்ற வேண்டும்.
ஃபிரிட்ஜ் நீண்ட நாள் உழைக்க வேண்டுமெனில் வருடத்திற்கு ஒருமுறையாவது பழுதுபார்ப்பது அவசியம்.குறிப்பாக வீட்டில் வாரம் அல்லது மாதம் இருமுறை ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும்.