கார்த்திகை தீப வழிபாடு.. மறந்தும் இந்த திசையில் விளக்கு ஏற்றக்கூடாது - ஏன் தெரியுமா?

Festival Tiruvannamalai
By Vidhya Senthil Dec 11, 2024 12:00 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in ஆன்மீகம்
Report

 திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில் எத்தனை எத்தனை வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  திருவண்ணாமலை

கார்த்திகை திருநாளில் ஒவ்வொரு வீட்டையும், அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். அன்றைய தினம் இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி, மக்கள் இறை வழிபாட்டை மேற்கொள்வர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

தமிழ்நாட்டில் திருவிளக்கு இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுவதால் அதற்கான மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.

பூஜைக்கு ஏற்றப்படும் திரு விளக்கிற்குப் பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல், பொரியில் வெல்லப் பாகு சேர்த்தும், கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்யுங்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு போறீங்களா ? அப்போ இதை பாருங்க!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு போறீங்களா ? அப்போ இதை பாருங்க!

 கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருநாள் அன்று அகல் விளக்குகளைச் சுவாமி அறையில் ஏற்றி, தெரிந்த சுலோகங்களைப் பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள். வீட்டில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 தீபம் ஏற்றுவது சிறப்பான ஒன்றாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும் மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.