உலகில் மிக சுவையாக சமைக்கும் பெண்கள் உள்ள நாடு இதுதான்! இந்தியா எந்த இடம் தெரியுமா?
சுவையான சமையல் செய்யும் பெண்கள் கொண்ட நாடுகளை குறித்து இந்த பதிவில் காணலாம்.
சமைக்கும் பெண்கள்
இந்த காலகட்டத்தில் பல விதமான உணவுகளை தேடித் தேடி உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பொதுவாகவே மனிதர்களிடையே உணவு மீது அதீத ஈடுபாடு இருக்கும். அப்படி வெளியில் உணவகத்தில் சாப்பிட்டாலும் வீடுகளில் செய்யப்படும் உணவுகள் ஒரு தனி ருசி தான்.
குறிப்பாக ஒரு வீட்டின் தலைவியான பெண்கள் அக்கறையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப சமையல் செய்வதுண்டு. இதன் அடிப்படையில், பிரபல வோக் (VOGUE) இதழானது, உலகில் எந்தெந்த நாட்டில் அதிக வெரைட்டிகளிலும், மிகச் சுவையாகவும் சமைக்கின்ற பெண்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இத்தாலி:
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது இத்தாலி.
இங்கு அவர்களது பாரம்பரிய உணவுகள் நேர்த்தியான செய்முறைகளை கொண்டது. வித விதமான வகைகளில் உள்ள பாஸ்தா மற்றும் சாஸ்ககள் போன்ற பலவற்றை தயாரிக்கிறார்கள்.
ஜப்பான்
பட்டியலில் அடுத்ததாக 4வது இடத்தை ஜப்பான் நாடு பிடித்துள்ளது.
ஜப்பானிய பெண்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுகளைக் கலைநயத்தோடு காட்சிப்படுத்துவதிலும், பரிமாறுவதிலும் பெயர் போனவர்கள். சுஷி மற்றும் பாரம்பரிய ஜப்பானிய இரவு உணவான கைசேகி (Kaiseki) தயாரிப்பதன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்கள்.
மெக்சிகோ
மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது மெக்சிகோ நாடு ஆகும்.
மெக்சிகன் பெண்கள் டாகோஸ் (tacos) மற்றும் மோல் (Mole) போன்ற உணவுகளில் அவர்களது நாடுகளில் கிடைக்கும் மசாலாக்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு தனித்துவமான சுவையுடன் சமைப்பதால் பிரபலமடைந்துள்ளனர்.
பிரான்ஸ்
பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது.
பாரம்பர்ய முறைகளை கையாள்வதிலும் அந்த முறைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக கோகோ வேன் மற்றும் நேர்த்தியான கேக்குகளை சுவை மற்றும் தரத்துடன் தயாரிக்கின்றனர்.
இந்தியா
இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருகிறது இந்தியா. உலகளவில் சிறந்த சமையல்காரர்களாக இந்திய பெண்கள் உள்ளனர்.
நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் வித விதமான உணவுகளை வித்தியாசமான செய்முறைகளை கொண்டு பெண்கள் தயாரிப்பதால் இந்த பட்டியலில் பிரபலமாக கருதப்படுகிறார்கள்.