குளிர்காலத்தில் தவிர்க்ககூடாத தின்பண்டம் இதுதான் - ஏன் அவசியம் தெரிஞ்சிகோங்க!
குளிர்காலத்தில் தவிர்க்ககூடாத தின்பண்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தின்பண்டம்
உலர்ந்த திராட்சையை உட்கொள்வதால் உடலுக்கு ஏராலமான நண்மைகள் கிடைக்கிறது. ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய இந்த உலர் திராட்சை செரிமானத்தை மேம்படுத்தி,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிலும் குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு அற்புதமான தின்பண்டமாக உலர் திராட்சை இருக்கிறது.
அசிடிட்டி பிரச்சனை
இயற்கையாகவே கார தன்மை கொண்ட உலர் திராட்சை வயிற்றில் உள்ள அமிலத்தை
சமநிலைக்கு கொண்டு வந்து நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
கால்சியம் மற்றும் போரான் அதிகம் காணப்படுவதால் உலர்ந்த திராட்சை எலும்புகளை வலுப்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
குறிப்பாக குளிர்காலத்தில் வரும் மூட்டு பிரச்சனைகளுக்கு அற்புதமாக தீர்வாக அமைகிறது.
பற்கள் மற்றும் ஈறுகள்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உலர் திராட்சை வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்க்கிறது.
இதன் காரணமாக பல் சொத்தை, ஈறு சம்பந்தமான நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பார்வைத் திறன்
வைட்டமின் A மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் உலர்ந்த திராட்சை கண் பிரச்சனைகள் ஏதும் தடுக்கிறது.
உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் கண்களுக்கு பாதுகாப்பு வழங்கி, ஒட்டுமொத்த பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.
வறட்டு இருமல்
உலர் திராட்சை வறட்டு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது.
மேலும் இது சளியை தளர்த்தி சுவாசிப்பதை எளிதாக்குகிறது.