நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிட்டால் இந்த நோய்களெல்லாம் மறைந்து போகுமாம்!
உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். இப்படி சாப்பிட்டால் உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி செய்யும்.
மலச்சிக்கலுக்கு
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலிலிருந்து விரைவில் விடுபடலாம்.
பெண்களுக்கு
பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
உடல் சூடு
உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
கெட்ட கொலஸ்ட்ரால்
குறையும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
குடல்புண் ஆற
அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.