800 பேர் பலியான மிக மோசமான ரயில் விபத்து - இந்தியாவில் எங்கு நடந்தது தெரியுமா?
800 பேர் பலியான இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில் விபத்து
இந்தியாவில் பல ரயில் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. அதில் 43 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் நடந்த கொடூரமான ரயில் விபத்து தான். பீகார் மாநிலத்தில் 1981 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி , 416-DN என்ற பயணிகள் ரயில் மான்சியிலிருந்து சஹர்சாவுக்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அது ஒன்றே ரயில் என்பதால், அதிக அளவில் மக்கள் பயணம் செய்தனர்.அப்போது பாக்மதி ஆற்றின் பாலத்தைக் கடக்கும்போது, பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யதது. இதனால் தண்டவாளங்கள் வழுக்கும் தன்மையுடன் இருந்தது.
800 பேர் பலி
அப்போது பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகளில் 7 பெட்டிகள் பாலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 300 பேர் இறந்ததாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 800 பேர் இறந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் மீட்புப் படையினரால் 286 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கிடைக்கவே இல்லை. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இது தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய ரயில் விபத்து ஆகும்.