டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!
ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மகா கும்பமேளா திருவிழா கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும்.
இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் திருமேனி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மேலும் மகா கும்பமேளா முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அங்குச் செல்வதற்காக ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதன்படி, மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளப் புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து ஸ்வதந்திரா சேனானி விரைவு ரயில், புவனேஷ்வர் ராஜ்தானி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று, இரவு 10 மணியளவில் நடைமேடை 14-ல் பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், புறப்படத் தயாராக நின்றிருந்தது.
உயிரிழந்த சம்பவம்
அந்த சமயத்தில் ரயிலுக்காக ஏராளமான பயணிகள் 14 ஆவது நடை மேடையில் நின்றிருந்தனர். அப்போது மகா கும்பமேளாவிற்குச் செல்லும் ரயில் தாமதாக இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனால் அங்குப் புறப்பட தயாராக இருந்த பிரயாக்ராஜு பயணிகள் விரைவு ரயில்,ஏற முண்டியடித்தனர்.
அப்போது அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.