95 வருடமாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க!

Pope Francis Vatican World
By Swetha Jun 20, 2024 06:12 AM GMT
Report

ஒரு நாட்டில் 95 வருடமாக குழந்தை பிறக்காததுக்கான காரணம் குறித்து காணலாம்.

குழந்தை இல்லா நாடு

உலக நாடுகளில் மக்கள் தொகை பிரச்சினை தற்போது தலை விரித்தாடுகிறது எனலாம். ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் குழந்தை பெற்றெடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

95 வருடமாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க! | Do You Know A Country With No Baby Birth For 95 Yr

அதுவே மக்கள் தொகை குறைந்து வரும் சில நாடுகளில் குழந்தைகள் பிறக்க வேண்டி பல உத்தரவுகள், அதற்கு தேவையான பொருளாதார செலவுகள் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு நாட்டில் ஒரு நூற்றாண்டை தொடும் நிலையிலும் குழந்தையே பிறக்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

கிறிஸ்தவர்களின் மூத்த தலைவர் போப் ஆண்டு வரும் வாடிகன் நாட்டில் தான் கடந்த 95 வருடமாக குழந்தை பிறக்கவில்லை என்கின்றனர். உலக நாடுகளின் முக்கியமான கிறிஸ்தவ தலைவர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த கிறிஸ்தவ குடும்பங்கள் இவர்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளனர்.

இந்த 6 நாடுகளுக்கு கட்டுப்பாடு போட்ட இந்தியா : காரணம் என்ன?

இந்த 6 நாடுகளுக்கு கட்டுப்பாடு போட்ட இந்தியா : காரணம் என்ன?

எது தெரியுமா? 

கடந்த 1929ம் ஆண்டு இந்த நாடு முழு சுதந்திர உரிமை பெற்றது.அதிலிருந்து இன்று வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. இங்கு குடியேற வேண்டுமானால் ஒருவர் பாதிரியாராகவோ அல்லது துறவியாக மட்டும் தான் இருக்க வேண்டும் .அந்த பதிவுக்காலம் வரை இங்கு தங்கலாம் தவிர முழு குடியுரிமை கிடைக்காது.

95 வருடமாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க! | Do You Know A Country With No Baby Birth For 95 Yr

மேலும், இங்கு மருத்துவமனை வசதி கூட அனுமதி இல்லை, காரணம் இது ரொம்ப சின்ன நாடு அருகிலேயே பெரிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இருப்பதால்தான். இங்கு பெண்கள் தங்களுடைய பிரசவம் நெருங்கும் நேரத்தில் பக்கத்தில் உள்ள ரோமுக்கு சென்று தங்கிவிட வேண்டும்..

அங்கேயே பிரவேசம் நடப்பதால் ரோம் நாட்டின் குடியுரிமை தான் அந்த குழந்தைக்கு கிடைக்கும். இங்கு கருக்கலைப்புக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் இந்த நாட்டில் எந்த ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என சொல்லப்படுகிறது.