சுடு தண்ணீரில் தேனை கலப்பது ஆபத்தா? தவறான காம்பினேஷன்கள் பற்றி தெரிஞ்சிகோங்க!
தேனை எந்த பொருட்களோடு கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன்
ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டது. அப்போது தேன் கச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் தேனில் என்னற்ற நற்குணங்கள் உள்ளது.
தேன் என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு இனிப்பானாக கருதப்படுகிறது. இது பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்பட்டு நமக்கு எக்கச்சக்கமான நன்மைகளை அளிக்கிறது. ஆனால் தேனை ஒரு சில உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவதால் பாதிப்புகள் ஏற்படலாம்.
சுடு தண்ணீருடன் தேன்
கொதிக்கும் தண்ணீரின் தேன் கலந்து குடிப்பதால் ஆபத்தை ஏற்படும் அபாயம் உள்ளது. தேன் 140° களில் விஷமாக மாறும் தன்மை கொண்டது என்று கடந்த 2010ம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது.
தேனில் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் அவற்றை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தும் போது அது கேன்சர் ஏற்படுத்தும் பொருட்களாக மாறுகிறது.
பூண்டும் தேனும்
தேனுடன் பூண்டை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
பூண்டில் வலிமையான நுண்ணுயிரி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. தேன் மற்றும் பூண்டை ஒன்றாக உண்ணுவதால் நமது உடலுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
வெள்ளரிக்காய் மற்றும் தேன்
குளுமை மற்றும் டையூரிட்டிக் பண்புகள் நிறைந்த வெள்ளரிக்காயை தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
ஏனெனில் இதனால் சரும பிரச்சனைகள் அல்லது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
நெய் மற்றும் தேன்
தேன் மற்றும் நெய்யை சாப்பிடுவது உடலுக்கு நஞ்சாக மாறலாம். கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் எலிகளுக்கு தேன் மற்றும் நெய் சமமான அளவில் வழங்கப்பட்டது.
இந்த காம்பினேஷன் காரணமாக எலிகளுக்கு முடி உதிர்வு, உடல் எடை குறைப்பு மற்றும் காது பகுதிகளில் சிவப்பு திட்டுகள் ஏற்பட்டது. எனவே இதனை சேர்ந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இறைச்சி மற்றும் மீனுடன் தேன்
மீன் மற்றும் இறைச்சி போன்ற அதிக புரோட்டின் நிறைந்த உணவுகளோடு தேனை கலந்து சாப்பிடக்கூடாது.
இது ஒரு வித்தியாசமான சுவையை கொடுப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தை தாமதமாக்கி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும்.
பழங்களுடன் தேன்
மாம்பழத்தோடு தேன் சேர்த்து சாப்பிடுவது மாம்பழத்தின் சுவையை இன்னும் அதிகரிக்கும் என்பது உண்மைதான்
ஆனால் அவ்வாறு சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவுகளை தாறுமாறாக அதிகரித்து விடும். எனவே அன்னாசிப்பழம், மாம்பழம் போன்ற அதிக இனிப்பான பழங்களுடன் தேன் சாப்பிடக்கூடாது.