தேனில் ஊற வைத்த மலைப்பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Healthy Food Recipes
By Thahir Jul 28, 2022 08:58 AM GMT
Report

தினமும் காலையில் தேனில் ஊறிய மலைப் பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மருந்து :

ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டது.

தேனில் ஊற வைத்த மலைப்பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Eating Garlic Soaked In Honey

அப்போதிருந்தே மலைப்பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அதேபோல் எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவையிரண்டும் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தயாரிப்பு முறை :

உங்களுக்கு தேவையான அளவு மலைப் பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

தேனில் ஊற வைத்த மலைப்பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Eating Garlic Soaked In Honey

கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு மலைப் பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.

சாப்பிடும் முறை :

தினமும் காலையில் அரை ஸ்பூன் அல்லது 4 பூண்டு பற்கள் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு இரண்டு முறை அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் . உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது நல்லது.

வைரஸ் காய்ச்சல் :

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். மலைப் பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி :

பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

மாரடைப்பு :

வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்குகிறது. இதனை குறைக்க மலைப் பூண்டு முக்கியப் பங்காற்றுகிறது.

மேலும், ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். மலைப் பூண்டு உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

அதே போல பூண்டில் உள்ள அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

அலர்ஜி :

டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை மலைப் பூண்டு இருப்பதால் அவை அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமைகளை தடுத்திடும். அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.

செரிமானம் :

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. 

கொழுப்பு :

தேன் மற்றும் மலைப் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம்.

ரத்த சோகை :

உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது.

தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய மலைப்பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதோடு இது நரம்புத் தளர்ச்சியையும் சரி செய்கிறது.

இருமல் :

சிலருக்கு லேசாக தட்பவெட்பம் மாறினாலே தொடர் இருமல் வந்திடும். அல்லது சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும்.

அவர்கள் தேனில் ஊறிய மலைப்பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும். சளியினால் ஏற்ப்பட்ட இருமலாக இருந்தால் மருத்துவரிடம் காண்பிப்பது தான் நல்லது.