சென்னைக்கு வந்த மூளை திசு பகுதி...சைதை துரைசாமியின் மகனுடையதா...?
ஆற்றில் வெற்றி துரைச்சாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி 8 நாட்கள் ஆகிய நிலையிலும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.
தேடும் பணி
சைதை துரைசாமியின் மகன் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், தற்போது வரை எந்த வித தகவலும் அவரை குறித்து வெளிவரவில்லை.
உடன் சென்ற இவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இமாச்சல பிரதேச போலீசாரும் வெற்றியை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், விபத்து ஏற்பட்ட இடத்தில மனித மூளை பகுதி ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில், அது யாருடையது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூளை பகுதி
மூளை பகுதியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று இரவு சைதை துரைசாமி மற்றும் அவரின் மனைவியிடம் ரத்த மாதிரி எடுக்க அவரது வீட்டிற்கு மருத்துவ குழுவினர் சென்றனர். இந்த பரிசோதனைகளின் முடிவு இன்று தெரியவரும் என கூறப்படுகிறது.