விளையாட்டாக பெண் எடுத்த DNA டெஸ்ட் - கடைசியில் வெடித்த ட்விஸ்ட்!
விளையாட்டாக ஆரம்பித்த ஒரு செயல், குடும்பத்தின் நிம்மதியை குலைத்துள்ளது.
DNA டெஸ்ட்
ஐரோப்பாவை சேர்ந்த பெண் ஒருவர், தனது ரெட்டிட் தலத்தில் பதிவிட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அதில், நண்பர் ஒருவர் இவருக்கு DNA கிட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதை தனது சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து விளையாட்டாக சோதித்து பார்க்க ஆசைப்பட்டு DNA சோதனை செய்துள்ளனர். அதன் முடிவைப் பார்த்து பேரதிர்ச்சியில் ஆழ்ந்தார். ஏனென்றால், அவரின் சகோதரர் மற்றும் சகோதரிக்கு ஒத்து போன டிஎன்எ, இவருக்கு பொருந்திப்போகவில்லை.
பெண் மனவேதனை
கிட்டில் ஏதாவது பிரச்னை இருக்கும் என்று இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவரது சகோதரி இதுகுறித்து தாய் தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது, அவரது தாய் கோபத்தில் அவ்வாறு எதுவும் இல்லை என்றும், தந்தை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

அதன்பின், நீ எனக்கு பிறக்கவில்லை என்றாலும், நீ எப்போதும் என் சொந்த மகள் தான் எனக் கூறியுள்ளார். உடனே, உனது உண்மையான தந்தை யார் என்பதை நான் நிச்சயம் கண்டுபிடிப்பேன் என்று தனது சகோதரி கூறியதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், தாய் இதுகுறித்து பேசவும், விளக்கம் கொடுக்கவும் இவரிடம் பலமுறை முயற்சி செய்தபோதும், அதை கேட்க தான் தயாராக இல்லை என்றும், இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் இத்தனை ஆண்டு காலமாக எவ்வாறு அவர்களால் மறைக்க முடிந்தது என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil