வேங்கைவயல் விவகாரம் : டி.என்.ஏ பரிசோதனை நடைமுறை இன்று தொடக்கம்

By Irumporai Apr 25, 2023 04:43 AM GMT
Report

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக இன்று 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

 வேங்கை வயல் விவகாரம்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சில மர்ம நபர்கள் மனிதக்கழிவுகளை கலந்துவிட்டனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த இந்த அதிர்ச்சியான சம்பவத்தை முதலில் காவல்துறையினர் விசாரிக்க துவங்கினர்.

வேங்கைவயல் விவகாரம் : டி.என்.ஏ பரிசோதனை நடைமுறை இன்று தொடக்கம் | Venkaiwayal Village Dna Tests

 டிஎன்ஏ பரிசோதனை

அதன்பிறகு, இந்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 100 நாட்களாக விசாரித்து, தற்போது 11 பேரிடம் இறுதி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 11 பேரில் ஒரு சிலர் தான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளனர் எனவும், குடிநீர் தேக்க தொட்டியில் 2,3 பேரின் மாதிரிகள் இருப்பதாகவும், அதானல் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தது.

11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று அவர்களும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட உள்ளன. அந்த ரத்த மாதிரிகள் டி.என்.ஏ பரிசோதனை செய்து ஒப்பீடு செய்ய தஞ்சை அல்லது சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.