அதிமுகவை பழிவாங்க நினைக்கிறது திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Tamil nadu ADMK DMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Oct 18, 2022 07:53 AM GMT
Report

அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறத்தின் வழியாக சட்டசபை வழியாக பழிவாங்க நினைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் வெளியேற்றம் 

சட்டமன்ற கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று கூடியது. அப்போது சட்ட சபையில் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து முழகங்களை எழுப்பிதால் பரபரப்ப்பு ஏற்பட்டது.

பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றினர்.

இபிஎஸ் குற்றச்சாட்டு 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் துணைச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடிதம் கொடுத்து சுமார் இரண்டு மாத காலம் ஆகிறது.

அதிமுகவை பழிவாங்க நினைக்கிறது திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Dmk Wants To Take Revenge On Aiadmk Eps

நேற்று வரை அவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை. நியாயமாக நடுநிலையோடு செயல்படும் சபாநாயகர் அரசியல் நோக்கோடு செயல்படுவதாக நினைக்கிறோம்.

சட்டமன்றம் என்பது வேறு. கட்சி என்பது வேறு. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெடுத்திட்ட கடிதங்கள் மற்றும் எங்கள் நியாயத்தையும் தெரிவித்தோம்.

அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறத்தின் வழியாக சட்டசபை வழியாக பழிவாங்க நினைக்கின்றது என தெரிவித்தார்.